ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜமைக்காவின் சபைனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் 27 ரன்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.
இது 1955-ல் இங்கிலாந்தை எதிர்த்து நியூசிலாந்து 26 ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோராகும்.
மிச்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை 9 ரன்களுக்கு எடுத்து வீழ்த்தினார். அதே நேரத்தில் ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் எடுத்ததன் மூலம், மேற்கிந்திய தீவுகள் 14.3 ஓவர்களில் முழுமையாக வீழ்த்தப்பட்டது.
ஆஸ்திரேலியா 204 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக காக்க, இந்த போட்டியில் 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டெஸ்ட் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோர்கள்:
1.நியூசிலாந்து – 26 ரன்கள் vs இங்கிலாந்து, 1955
2.மேற்கிந்திய தீவுகள் – 27 ரன்கள் vs ஆஸ்திரேலியா, 2025
3.தென்னாபிரிக்கா – 30 ரன்கள் vs இங்கிலாந்து, 1896
4.தென்னாபிரிக்கா – 30 ரன்கள் vs இங்கிலாந்து, 1924
5.தென்னாபிரிக்கா – 35 ரன்கள் vs இங்கிலாந்து, 1899