டார்வின் இல் நடைபெற்ற முதலாவது ஆட்டத்த்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி தலைவர் களத்தடுப்பை தேர்ந்து எடுத்தார்.
முதலில் துடுப்பெடுத்த்து ஆடிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒரு கட்டத்த்தில் 74 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த்தது.
அதன் பின்னர் தனது அதிரடியாய் காட்டிய டிம் டேவிட் உதவியுடன் ஆஸ்திரேலியா 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அதிக பட்சமாக டிம் டேவிட் 83 ஓட்டங்களையும் கேமரூன் க்ரீன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்கில் இளம் வீரர் க்வெனா மபாகா 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 17 ஓட்டங்களால் தோல்வி அடைந்த்தது.
ரியான் ரிக்கெல்ட்டன் 71 ஓட்டங்களையும் , ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஹாசெலவூட் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.