கொழும்பு கோட்டை நீதிமன்றம் நேற்று (23) நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை காவல் துறைக்கு நேற்று உத்தரவிட்டிருந்தது.
அதற்கமைய இன்று அர்ச்சனா ராமநாதன் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்
முன்னதாக, கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரியை தடுத்ததாகவும், மோட்டார் போக்குவரத்து சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டி கோட்டை காவல் துறை அவருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்திருந்தது. சம்பவத்திற்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.