தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (National Development Bank PLC) நிறுவனம், ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கும், பேரழிவுக்குப் பின்னர் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அமைக்கப்பட்டுள்ள “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு ரூ. 50 மில்லியன் நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளது.
அதற்கான காசோலை நேற்று (22) தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சியின் துணை பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. K. V. வினோஜ் அவர்களால், ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திகா சனத் குமாரநாயக்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சியைச் சேர்ந்த திரு. சஞ்சய பெரேரா மற்றும் திரு. C. L. B. தசநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
news.lk