வரலாற்றில் முதன்முறையாக $5,000 ஐ தாண்டிய தங்க விலை

உலக சந்தையில் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $5,000 ஐ தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.

இதுவரை எப்போதும் காணாத இந்த விலை உயர்வு உலக முதலீட்டாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.உலக பொருளாதாரத்தில் நிலவும் அநிச்சயம், நிதி சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகள் மற்றும் பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை அதிகரித்ததே இந்த வரலாற்று உயர்வுக்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தங்கம் மீண்டும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையான சொத்தாக மாறியுள்ளது.இந்த சாதனை உயர்வு தங்கம் வெறும் ஆபரணம் மட்டுமல்ல, நெருக்கடி காலங்களில் பாதுகாப்பான முதலீட்டு ஆதாரமாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

சந்தை நிலைமைகள் மாறினாலும், தங்கத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து வலுவாகவே இருந்து வருகிறது.

$5,000 என்ற வரலாற்று எல்லையை தாண்டிய இந்த நிகழ்வு, உலக நிதி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *