தபலாங்கொடை, தெஹிகஸ்தலாவையில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வயது பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த தீ விபத்தானது, இன்று (9) அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை அவசர தொலைபேசி எண்ணில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பலாங்கொடை காவல்துறையினர் உயிரிந்த பிள்ளையின் உடலை மீட்டுள்ளனர்.
தாயும் தந்தையும் காயங்களில் இன்றி தப்பியுள்ள நிலையில், குறித்த உயிரிழப்பு தொடர்பில் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தந்தை போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் இது தொடர்பான நீதவான் விசாரணையை பலாங்கொடை பதில் நீதவான் விசாரணை நடத்தவுள்ளதாகவும், பிள்ளையின் சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.