2025-2026 ஆண்டுக்கான ஆஷஸ் தொடர்களின் முதலாவது போட்டி இன்று காலை ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பு எடுத்து ஆட தீர்மானித்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய சக் குரோளி முதலாவது ஓவரின் கடைசி பந்திலே ஆட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழந்தார்.
அதைத்தொடர்ந்து இந்த 32.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை மட்டும் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஹரி புரூக் 56 ஓட்டங்களையும் ஒல்லி போப் 46 ஓட்டங்களையும் ஜேமி ஸ்மித் 38 ஓட்டங்களையும் பென் டக்கெட் 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இவர்களை தவிர வேறு எந்த வீரரும் இரட்டை எண்களை தொடவில்லை.
ஆஸ்திரேலியா அணிக்காக அபாரமாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க்க் 58 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளை கைப்பற்றினார்.டோஃகேட்2 விக்கெட்டுகளையும் கிரீன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்