Apple நிறுவனம் iOS 26.3 (b) என்ற புதிய beta software update-ஐ ஜனவரி 8, வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இது iOS 26.3 (a) வெளியான வெறும் இரண்டு நாட்களுக்குப் பிறகு அறிமுகமாகியுள்ளது.
இந்த இரண்டு அப்டேட்களும் பொதுப் பயனர்களுக்கான வழக்கமான அப்டேட்கள் அல்ல; அவை முழுமையாக பாதுகாப்பு சோதனை (security testing) நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அப்டேட்களின் முக்கிய நோக்கம் Background Security Improvements என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தை சோதிப்பதாகும். இந்த அம்சம், iPhone இயங்கும் பின்னணியில் (background) பாதுகாப்பு மேம்பாடுகளை அமைதியாகச் செய்ய உதவுகிறது.
இதனால் பயனர் எந்த இடையூறும் இல்லாமல் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெற முடியும்.இந்த அப்டேட் சாதாரண Software Update பகுதியில் இல்லை. அதை காண Settings → Privacy & Security → Background Security Improvements என்ற வழியில் செல்ல வேண்டும்.
இந்த மாற்றத்தை முதலில் கண்டறிந்தவர் MacRumors ஆய்வாளர் Aaron Perris ஆவார். அவரது தகவலின்படி, iPhone 11 முதல் iPhone 17 Pro வரை உள்ள மாடல்களில், developer மற்றும் public beta பயன்படுத்தும் பயனர்கள் இதை சோதிக்க முடியும்.
இதன் பயனர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.Apple நிறுவனம் இந்த Background Security Improvements அம்சத்தை முதன்முதலில் iOS 26.1-ல் அறிமுகப்படுத்தியது.
இது 2022-ல் iOS 16-ல் வந்த Rapid Security Response முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இது பொதுப் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்படவில்லை.முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது என்னவெனில், iOS 26.3 (b) ஒரு test-only beta update ஆகும்.
இது உடனடி பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்யும் அப்டேட் அல்ல; எதிர்கால பாதுகாப்பு முறைகளை சோதிக்க Apple மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகும்.