டிராவிஸ் ஹெட் அதிரடியால் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்க்ஸில் இங்கிலாந்து அணி சகலவிக்கட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடிப்பெடுத்த ஆடிய ஆஸ்திரேலியா அணியும் பேட்டிங்கில் தடுமாற 132 ஓட்டங்களில் சுருண்டது .

அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

அதன் பிறகு இன்று காலை மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை துடிப்பெடுத்தாட களம் இறங்கிய இங்கிலாந்து அணி மறுபடியும் பேட்டிங்கில் தடுமாற 164 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுகளையும் இழந்தது.

205 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான இந்த இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியும் இரண்டாவது இன்னிங்ஸில் இலக்கை எட்ட தடுமாறும் என்றே அனைவராலும் கணிக்கப்பட்டது

ஆனால் அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டிராவிஸ் ஹெட் பந்துகளில் 123 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அவருக்கு பக்க பலமாக மாரன்ஸ் லபூஷன் 51ஓட்டங்களை விளாசினார்.

இரண்டு நாட்களிலேயே இந்த டெஸ்ட் போட்டி முடிவடைந்ததது குறுப்பிடத்தக்கது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் என்ற வகையில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியஆஸ்திரேலியா வீரர் மிச்சல் ஸ்டாக் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *