பொகவந்தலாவை கொட்டியாகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்கள், தமது ஒருநாள் சம்பளத்தை “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
“டித்வா” புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்கட்டமைப்பு மற்றும் நலன்புரி பணிகளுக்காக, அரசாங்கத்தின் மேற்பார்வையில் செயல்படும் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற மனிதாபிமான நோக்குடன், குறித்த தோட்டத் தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் வருமானத்தை ஒருமனதாக வழங்கியுள்ளனர்.
இதன்படி, பொகவந்தலாவை கொட்டியாகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் மொத்தமாக ரூ.108,000 நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி வழங்கும் நிகழ்வு நேற்று உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.அந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு, நன்கொடை வழங்கிய தொழிலாளர்களின் சமூக பொறுப்புணர்வையும், ஒற்றுமையையும் பாராட்டினர்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க இத்தகைய மக்கள் பங்களிப்பு முக்கிய பங்கு வகிப்பதாகவும், இவ்வாறான மனிதநேய நடவடிக்கைகள் நாட்டின் மறுசீரமைப்புக்கு வலுசேர்க்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.